tamilnadu

img

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டாகும் "கோபேக் அமித்ஷா"  ஹேஷ்டேக்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வர உள்ள நிலையில் கோபேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் சென்னை வர உள்ளார். தமிழகத்தில் 2 நாட்கள் தங்கும் அமித்ஷா  ரூ. 62,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் அமித்ஷாவின் தமிழக  வருகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
இந்த நிலையில் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அளவில் ட்ரெண்டாகி வரும் கோபேக் அமித்ஷா  ஹேஷ்டேக்   முதல் இடத்தில் உள்ளது. 
 

;