tamilnadu

img

‘அச்சம் தவிர்த்த மனிதர்களை சமூகம் தேடுகிறது’

அச்சம் தவிர். ஆண்மை தவறேல்  என்றான் பாரதி. எதற்காக அப்படி சொன்னான், இன்னொரு பாடலில் சொல் கிறார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனி யிலே என்கிறார். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறான். அதற்காகத்தான் அச்சம் தவிர்  என்றார்.  இந்த தேசம் அடிமைப்பட்டுக் கிடந்த போது 1930களில் சூர்யாசென் என்பவர் தலை மையிலான குழுவினர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்தது. சூர்யாசென் உள்பட அவரது தோழர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் ஒரு கிராமத்தில் உள்ள தக வல் அறிந்து அந்த கிராமத்தை பிரிட்டிஷ் படை முற்றுகையிட்டது. அங்கிருந்தும் சூர்யாசென் தப்பிக்கிறார். பிறகு ஒரு நண்ப ரின் வீட்டில் தங்குகிறார். சூர்யாசென்னின் புரட்சிகர நடவடிக்கை பிரிட்டிஷ் அரசுக்கு பெரிய தலைவலியாகிறது. இதனையடுத்து அவரது உயிருக்கு விலை வைக்கிறது. காட்டிக்கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக அறிவிக்கப்படுகிறது. நண்பரே  அவரை காட்டிக்கொடுக்கிறார். அப்போதும் அவர் தப்பிக்கிறார். இதனால் சூர்யாசென் னின் நண்பரின் மனைவியை பிரிட்டிஷார் கைது செய்து சூர்யாசென்னை பற்றி  விசாரிக்கும் போது அவர்  காட்டிக்கொடுக்க மறுக்கிறார். எவ்வளவு துன்புறுத்தியும் அவர் காட்டிக்கொடுக்கவில்லை. அச்சத்தை தவிர்த்ததால் ஒரு புரட்சியாளனை காட்டிக் கொடுக்க மறுத்தார் அவரது நண்பனின் மனைவி. 

நமது தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதால் அவருக்கு நீதிமன்றத்தில் 40 ஆண்டு அதாவது இரட்டை ஆயுள் தண் டனை வழங்கியது. வ.உ.சி.யின் அண்ணன் அந்த ராமனுக்கே 14 ஆண்டுகள் தான் வன வாசம். தம்பி உனக்கு 40 ஆண்டு சிறையா என்று கதறி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். சிறையில் வ.உ.சி யை மாட்டைப் போல செக்கிழுக்க வைத்தார்கள். நீதிமன்றம் கொடுத்த தண்டனையை ஆங்கிலேய அதி காரிகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ட னைக் காலத்தை குறைப்பதற்காக அவர்கள் வ.உ.சிக்கு சில ஆலோசனைகளை வழங்கி னர். ஆனால் இந்த தேசத்திற்காக ஆயிரம் ஆண்டுகள் சிறையிருக்க தயாராக இருப்ப தாக வ.உ.சி. தெரிவித்தார். 

வ.உ.சிக்கு எதிராக நீதிமன்றத்தில் அய்யங்கார் ஒருவர் வாதாடி தண்டனை பெற்றுத்தந்தார். அவர் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் போது நான் தான் வ.உ. சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தேன் என கூறுகிறார். அப்போது முகச் சவரம் செய்த அந்த நாவிதர் பாதி முகச்சவரம் செய்ததோடு கோபத்தில் தனது கருவிகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அது பற்றி அய்யங்கார் அந்த நாவிதரிடம் கேட்ட போது மீதியை வெள்ளைக்காரன் உனக்கு சவரம் செய்வான் என்று கூறிவிட்டுச் சென்றார். வ.உ.சிக்கு தண்டனை பெற்றுத் தந்த அய்யங்காருக்கு வேறு எந்த நாவிதரும் சவரம் செய்ய வரவில்லை. அப்படிப்பட்ட அச்சம் தவிர்த்த மனிதர்களை நான் தேடு கிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்.

(திண்டுக்கல் 
புத்தக திருவிழாவில் நடைபெற்ற 
சிந்தனையரங்கத்தில் கலந்து கொண்டு 
மதுரை பாலன் பேசியதிலிருந்து...)