தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டுள்ளன.
ஐதராபாத் அருகில் உள்ள நகரம் என்ற கிராமத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு முதியவர்களை சங்கிலியால் கட்டிவைத்து துன்புறுத்துகின்றனர் என்ற புகாரைத் தொடர்ந்து போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டு 73 பேர் போலீசார் மீட்டனர். அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டம்2007ன் கீழ் முதியோர் இல்ல நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.