மும்பை, ஏப். 20 - பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மாதத்தில் முன்னாள் பிரதமராவது உறுதி என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். “ஒவ்வொரு இடத்தில் பரப்புரை செய்யும்போதும், பயங்கரவாதம் கட்டுப் படுத்தப்பட்டு விட்டதாக மோடி பேசுகிறார்; மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே குண்டு வைத்து ஆறு பேரை கொன்ற பிரக்யா சிங் தாக்கூருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததுதான், பயங்கரவாதத்தை கட்டுப்படுத் திய லட்சணமா? என்றும் ஓவைசி கேட்டுள்ளார்.