tamilnadu

img

பிருந்தா காரத் மீது கொலை மிரட்டல் கர்நாடகா அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் பலர் மீது கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வெளியாகியிருப்பது தொடர்பாக கர்நாடக அரசு விரைந்து செயலாற்றி, நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“கர்நாடக மாநிலத்தில் முக்கியமான பிரமுகர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் கடிதம் வெளியாகியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இக்கயவர்கள் வெளியிட்டுள்ள கொலை மிரட்டல் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், நடிகர் பிரகாஷ் ராஜ், ஸ்வாமி நிஜகுணானந்தா, கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி மற்றும் 11 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது மிகவும் ஆழமான விஷயமாகும். கர்நாடக அரசு, இந்த கொலை மிரட்டல் கடித்த்திற்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்கள் யார் என புலனாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக துரிதகதியில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.

(ந.நி.)