tamilnadu

img

இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு -23.9 சதவிகிதம் சரிவு

இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு -23.9% அளவுக்கு சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 
மோடி அரசின் தவறான பொருளாதாரக்கொள்கையால்  பொருளாதார மந்தநிலையை நாடு எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. 
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜிடிபி) மதிப்பீடுகளை, 2011-12 ஆண்டின் முதலாவது காலாண்டு மற்றும் நடப்பு நிலவரம் ஆகியவற்றுடனும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் செலவின கூறுகளின் காலாண்டு மதிப்பீடுகளுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது.
2011-12 காலகட்டத்தின் முதலாவது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின்போது 26.90 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது. இது 2019-20ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 35.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, இது 2019-2020 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் பதிவான 5.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 23.9 சதவீதமாக சரிந்ததை காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 24 ஆண்டுகளில் இல்லாத வகையில்  மோசமான சரிவாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நிதியாண்டின் முதலாவது காலாண்டில், விவசாயத்துறை 3.4% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாக இருந்தது என்று தேசிய புள்ளியியல் துறை அலுவலக அறிக்கையில்