வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்...

அமராவதி
நாட்டில் கொரோனா பரவல் வேகம் நாள்தோறும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தாறுமாறாக எகிறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை இந்தியாவில் 5 லட்சத்து 30 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 124 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வருகிறது. இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 13,098 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.  

;