tamilnadu

img

தெலங்கானாவில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
இந்நிலையில் தெலங்கானாவில் 24மணிநேரத்தில் கனமழை 24 பேர் பலியாகி உள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரில் உள்ள முகமதியா ஹில்ஸ் பகுதியில் கனமழை காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் கனமழை காரணமாக ஐதராபாத் மக்கள் வீட்டை விட்டு யாரும் வெளி வர வேண்டாம் என்று அதிகாரிகள்வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.