கொச்சி:
தங்க கடத்தலில் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர், தூதரக பார்சல் மூலம் தங்கம்கடத்திய வழக்கின் அனைத்து விவரங்களையும் வெளியிடத் தயாராக இருப்பதாகவும், அதை ரகசியமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். வாக்கு மூலத்தை கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அனுமதித்தது.
யுஏபிஏவின் கீழ் என்ஐஏ பதிவு செய்த வழக்கில் சந்தீப்நாயர் நான்காவது குற்றவாளி. 30 கிலோ தங்கம் தூதரக பார்சல்களில் கடத்தப்பட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும், அதை சிஆர்பிசி 164 இன் கீழ் பதிவுசெய்ய வேண்டும் என்றும்சந்தீப் கூறினார். சந்தீப்பின் கோரிக்கையை என்ஐஏ எதிர்க்கவில்லை. ரகசியஅறிக்கையை பதிவு செய் வதற்கான நடவடிக்கைகள் எர்ணாகுளம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று என்.ஐ.ஏநீதிமன்றம் தெரிவித்துள் ளது. காணொலி மூலம் சந்தீப்பின் காவல் நீட்டிக்கப்பட்டது. ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காக மன்னிப்பு அல்லது வழக்கில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று நீதிமன்றம் சந்தீப்பிடம் கூறியது.