தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தில்லி சட்ட மன்ற தேர்தல் தேதியை இன்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் பேசியதாவது.
தில்லி பேரவைத் தேர்தல் குறித்து 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1.46 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 90,000 அலுவலர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மொத்தம் 13,000 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
70 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தில்லிக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 21 ஆகும்.
இதையடுத்து, பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது" என்றார்.
2020 தில்லி சட்டப்பேரவை தேர்தல்
ஜனவரி 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஜனவரி 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு
ஜனவரி 22 ந்தேதி வேட்பு மனு பரிசீலனை
ஜனவரி 24 ந்தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்
பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்
பிப்ரவரி 11 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.