சிபிஎஸ்இ தேர்வு குறித்து நாளை மாலைக்குள் முடிவு செய்யப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேர்வு நடத்துவதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளை மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.