குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜமால் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் ஜாமியா மில்யா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 1510க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.