புதுதில்லி, ஏப்.18-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டர் நிறுவனம்நீக்கியுள்ளது. ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டே, ஆதித்யநாத் தின் பதிவை நீக்கியுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.