tamilnadu

img

மோடி எதைச் செய்தாலும் லாபம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான்....பாமாயில் தடையிலும் அதானி, ராம்தேவுக்கே ஆதாயம்

புதுதில்லி:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது, ஆகியவற்றை மலேசிய நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்திருந்தார். “இந்தியா தனது மதச்சார்பற்ற அடிப்படைகளிலிருந்து விலகிச் செல்கிறது” என்று அக்கறையுடன் கூடிய தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.ஆனால், மகாதீர் முகம்மது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம்சாட்டி, அதற்கு தண்டனையாக மலேசியா பாமாயில் இறக்குமதிக்குமறைமுகத் தடை விதித்தார் பிரதமர்மோடி. இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் துணிச்சலுடன் செயல்படுவதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் மோடிக்கு இது கொடுத்தது.இந்நிலையில்தான், மலேசிய பாமாயிலுக்கு, மோடி அரசு விதித்த தடை நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அதுமோடியின் கார்ப்பரேட் முதலாளிகளுக் காக என்பது தெரியவந்துள்ளது.இந்தியாவின் சமையல் எண்ணெய்க்கான தேவையில் சுமார் 45 சதவிகிதத்தைமலேசிய பாமாயில்தான் பூர்த்தி செய்துவந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் சமையல் எண்ணெய்களை விட, மலேசிய பாமாயில் விலை குறைவாக இருந்ததால், வர்த்தகர்களும் மலேசிய பாமாயிலையே அதிகம் இறக்குமதி செய்து வந்தனர். 

தற்போது நேரடியான மலேசிய பாமாயிலுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதால், சுமார் 45 சதவிகித எண்ணெய் தேவையை உள்நாட்டு நிறுவனங்களே பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த உள்ளூர் நிறுவனங்கள் வேறுயாருடையதுமல்ல, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களும்- கார்ப்பரேட் முதலாளிகளுமான கௌதம் அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோருக்குச் சொந்தமானவைதான்.ஏனெனில் இந்திய சமையல் எண்ணெய் சந்தையில், அதானியின் வில்மர்நிறுவனம், ‘பார்ச்சூன்’ எனும் பெயரில், சோயா எண்ணெய், சூரிய காந்தி எண் ணெய், கடுகு எண்ணெய், அரிசித் தவிடுஎண்ணெய், கடலை எண்ணெய் மற்றும்பருத்தி விதை எண்ணெய் ஆகியவற்றைவிற்பனை செய்து வருகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் நிறுவனமாக ‘ருச்சி சோயா’ உள்ளது. இந்நிறுவனம் நுட்ரெல்லா, மகாகோஷ், சன்ரிச், ருச்சி கோல்டு, ருச்சி ஸ்டார் ஆகிய பிராண்டுகளில் சமையல் எண்ணெய்யை விற்று வருகிறது. இந்தநிறுவனத்தை அண்மையில்தான் ‘பதஞ்சலி’ ராம்தேவ் வளைத்துப் போட்டார். இமாமி அக்ரோடெக், கோகுல் அக்ரோ ரிசோர்ஸஸ், கார்கில் உள்ளிட்டநிறுவனங்கள் இருந்தாலும் அதானியின்பார்ச்சூனும், ராம்தேவின் ருச்சி சோயாவும்தான் பிரதானம். எனவே, மலேசியாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் இப்போது கொள்ளைலாபம் அடையப் போவது யாரென்றால் அவர்கள் அதானியும்... ராம்தேவும்தான். இந்திய சமையலறைகள், இனிமேல் அதானி, ராம்தேவ் கம்பெனிகளையே சார்ந்திருக்கப் போகின்றன. விலை, தரம் உள்பட அனைத்திலும் இனி அவர்கள்வைத்ததே சட்டமாகப் போகின்றன.

இதில் குறிப்பிட வேண்டிய, இன்னொரு முக்கியமான விஷயம், அதானியும், ராம்தேவும் முழுக்க முழுக்க இந்தியாவில் சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்து தரப்போவதில்லை; அவர் களும் மலேசிய பாமாயிலைத்தான் வாங்கித் தரப் போகிறார்கள்.. அதற்குத்தான் மோடி தடை விதித்து விட்டாரே என்றால், அதுதான் இல்லை! நேரடியானஇறக்குமதிக்குத்தான் தடை. மலேசியாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. எனவே, மலேசியா பாமாயிலைத்தான் இவர்களும் விற்கப் போகிறார்கள். பின்னர் எதற்காக மோடி தடை விதித்தார்? சந்தேகமே தேவையில்லை அதானி, ராம்தேவ் போன்ற முதலாளி நண்பர்களுக்காகத்தான் இதைச் செய்திருக்கிறார் என்று கருத வேண்டியுள்ளது. ‘ஆடு மேய்த்தது போலவும் ஆச்சு.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது போலவும் ஆச்சு..’ என்பார்களே அதுபோல.இங்கே குறிப்பிட வேண்டிய இன் னொரு விஷயமும் உண்டு. அது மலேசியபாமாயிலுக்கு தடை என்ற உடனேயே, அந்நாட்டு பிரதமர் என்ன கூறினார் என்பதுதான்.

“இந்திய வர்த்தகர்கள் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டது கவலை அளிக்கக்கூடியதுதான். அதேநேரம் நாங்கள்வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும், தவறான விஷயமாக இருந்தால்அதுகுறித்துப் பேசித்தான் ஆக வேண்டியதிருக்கிறது; தவறான விஷயங்களை நாங்கள் அனுமதித்தால் - பணத்தை மட்டும் சிந்தித்தால் அப்புறம் எங்களுக்கும் மற்ற மக்களுக்கும் அதிகளவில் தவறான விஷயங்கள் நடைபெறும். இந்தியாவின் புறக்கணிப்பால் மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்களுக்கு கடும் வருவாய் இழப்புஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கானதீர்வை மலேசிய அரசு கண்டுபிடிக்கும்.” - இவரும் ஒரு நாட்டின் பிரதமர்தான்..

;