திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

டெங்கு காய்ச்சலுக்கு புதுவை மாணவி பலி

 

புதுச்சேரி, ஜன.11- புதுவை முத்தியால்பேட்டை கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கநாதன். இவரது 2-வது மகள் ரம்யா (13). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.  இதற்காக அவர் கடந்த 5 ஆம் தேதி புதுவை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் ரம்யாவுக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் கூறுகையில், மாணவி ரம்யா டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புதுவை அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார். 

;