திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

கொரோனா பாதிப்பு... புதுச்சேரியில் 7 ஆக உயர்வு

புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிதமான வேகத்தில் பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி ஊரடங்கைக் கடுமையாக கடைப்பிடித்து வரும் நிலையில், அங்கு இதுவரை 5 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகபட்சமாக அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் குணமடைந்து உள்ளார்.

தற்போது புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

;