சிங்காரவேலரின் பிறந்தநாளை யொட்டி புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலரின் திருவுருவச்சிலைக்கு முதல்வர் நாராயணசாமி செவ்வாய்கிழமை (பிப்.18) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.