புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு முதல்வர் நாராயணசாமி புதுப்பேட்டை பகுதியில் வீடு வீடாக மக்களை சந்தித்தார். திமுக வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், சிபிஐ உழவர்கரை நகரச் செயலாளர் சேது செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.