திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

மேற்பனைக்காடு : கஜா புயலில் வீடு சேதம் மிகப் பழமையான ஓலைச்சுவடிகள் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது குடிசை வீட்டில் பாது காத்து வைக்கப்பட்டிருந்த மிக பழமை வாய்ந்த  ஓலைச் சுவடிகளை மிக மோசமான நிலையில் உள்ள தனது வீட்டில் பாதுகாக்க முடியாத நிலை யில் பழனிச்சாமி குடும்பத்தினர் வருவாய் துறை யினரிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.  இத்தகவல் அறந்தாங்கி வட்டாச்சியர் சூரிய  பிரபுவிற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகி யோர் முன்னிலையில் பழனிச்சாமி வீட்டிற்கு வந்த தாசில்தார் ஓலைச்சுவடிகளை பார்வை யிட்டு நீளம், அகலம் ஆகியவற்றை அளந்து கட்டிக் கொண்டு இரும்பு பெட்டியில் பாது காப்பாக வாங்கிச் சென்றார்.  இந்த ஓலைச்சுவடிகளை பழனிச்சாமி குடு ம்பத்தினர் வருவாய்த் துறையினரிடம் ஒப்படை த்து எழுதிக் கொடுத்தனர். மேலும் பல தலை முறைகளாக குடியிருக்க வசதியில்லாமல் குடிசையில் வாழ்ந்தாலும் வரலாற்று பொக்கி ஷமான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வந்த பழ னிச்சாமியின் வீடு கஜா புயலில் சேதமடைந்தது. இந்த வீட்டில் வைத்திருந்தால் சேதம டைந்து வரலாறுகள் மறைந்து போகும் என்பதா லும், வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். பழமையான ஓலைச்சுவ டிகள் இருப்பதை அறிந்த இளைஞர்கள், பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

;