tamilnadu

img

வேளாண் சட்டங்களால் பொதுவிநியோகத்திற்கும் ஆபத்து.... பி.சுகந்தி குற்றச்சாட்டு...

புதுக்கோட்டை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் பொதுவிநியோகத் திட்டத்திற்கும் ஆபத்து காத்திருக்கிறது என்றார் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி.“வேலை கொடு, உணவு கொடு, வன்முறையற்ற வாழ்வு கொடு” என்ற முழக்கங்களை வலியுறுத்தி நாடு முழுவதும் திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தமிழகத்தில் 60 மையங்களில் சுமார் 10ஆயிரம் பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்ட இயக்கங்கள் நடைபெற்றன. சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தென்சென்னையிலும், மாநில தலைவர் எஸ்.வாலண்டினா கள்ளக்குறிச்சியிலும், மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி புதுக்கோட்டையிலும் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்றனர்.

பி.சுகந்தி
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.சுகந்தி பங்கேற்றுப் பேசியதாவது: இந்திய அரசுக்கு சொந்தமான உணவுதானியக் கிடங்குகளில் சுமார் 8 கோடி டன் உபரியாக உள்ளது. ஆண்டுதோறும் பல லட்சம் டன் உணவுதானியங்கள் வீணாக்கப்படுகிறது. கொரோனா காலத்தில்கூட வேலை இல்லாமல் வறுமையில் வீட்டில் முடங்கிக்கிடந்த மக்களுக்கு அவற்றை பகிர்ந்தளிக்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. எல்லோருக்கமான பொது விநியோகத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.அசீம் பிரேம்ஜி யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், ஊரடங்கு காலத்தில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. முறைசாரா மற்றும் இதரத் துறைகளில் பணியாற்றிய 71 சதமான பெண்களும், 63 சதமான ஆண்களும் வேலையை இழந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.ஊரடங்கு காலத்தில் புலம்பெயந்த தொழிலாளர்கள் சந்தித்த கொடுமைகள் மிகக்கொடூரமானவை. வேலை செய்த இடத்தைவிட்டு சொந்த ஊருக்கு பல லட்சம் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் அவர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ரேசன் கடைகள் மூலமாக உணவு வழங்க மத்திய, மாநில அரசுகள் 

===தொடர்ச்சி 3ம் பக்கம்===

;