tamilnadu

img

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 41பேர் பலி


 பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதித்து 41 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் மாவட்டங்களில் கடந்த ஜூலை 29-ம் தேதி அன்று கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இதில் முட்சல், டாங்கறா கிராமங்களை சேர்ந்த பலர் மதுவாங்கி அருந்தி உள்ளனர். இதையடுத்து பலர் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாட்களில் பல கிராமங்களை சேர்ந்த 41 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.