சென்னை, ஜூன் 29- நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலா ளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம் ஜூன் 30 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில், நிதித்துறைக்கு பொறுப்பாக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருந்த சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்மு கம் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். 1985ஆம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகம், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்தி லிருந்தே நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்து வருகிறார். திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியி லும் நிதித்துறை செயலாள ராக பணி யாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக இருந்து வருகிறார். எம்.எஸ்.சி., வேளாண்மை படித்துள்ள சண்முகம், சிவ கங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்க ளின் ஆட்சியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.