tamilnadu

img

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

புதுச்சேரி,ஜன.16- அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுவை  காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.  தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி யுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்  சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது என்றும் விமர்சித்திருந்தார். மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். புதுவை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தும் காங்கி ரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார். முதலமைச்சர் நாராயணசாமியும், அவரது மகனும் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதை ஆதாரத்துடன்  சி.பி.ஐ.யிடம் கொடுக்க போவதாகவும் அறிவித்தார். தனவேலு எம்.எல்.ஏ.வின் புகாரை காங்கிரஸ்  எம்.எல். ஏ.க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர். எதிர்க்  கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து ஆட்சியை  மாற்றம் செய்ய தனவேலு முயற்சிக்கிறார். பாஜகவின்  ஏஜெண்டாக செயல்படுகிறார் என தனவேலுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்திருந்தனர். இதனிடையே, தில்லி சென்ற முதலமைச்சர் நாரா யணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சரு மான நமச்சிவாயம் ஆகியோர் கட்சி தலைமையிடம் தனவேலு எம்.எல்.ஏ. செயல்பாடு குறித்து புகார் தெரி வித்தனர். இந்த நிலையில், தொடர்ந்து கட்சி விரோத  நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புத லுடன் சஸ்பெண்டு செய்வதாக கட்சித் தலைவர் நமச்சிவாயம் அறிவித்தார்.