tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

பொருளாதார வீழ்ச்சியை மூடிமறைக்க மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது மோடி அரசு

வெண்மணியில் கே.பாலகிஷ்ணன் அழைப்பு

நாகப்பட்டினம்,டிச.25- பொருளாதார வீழ்ச்சியை மூடிமறைக்கவே மக்களை திசைதிருப்பி பிளவுபடுத்த மோடி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது; அதை முறி யடித்து, தேசத்தையே விலைபேசுகிற மோடி  அரசின் கேடுகெட்ட பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்து ஜனவரி 8 அன்று நடை பெறவுள்ள  மாபெரும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை மகத்தான வெற்றிபெறச் செய்திட களமிறங்குவோம் என்று கே.பால கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். வர்க்கப் போராட்டத்தின் மகத்தான தியாகச்  சுடராம் வெண்மணித் தியாகிகளின் 51வது நினைவுதினத்தையொட்டி டிசம்பர் 25 புதனன்று கீழவெண்மணியில் தியாகிகள் ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு,  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள்  செவ்வணக்கம் செலுத்தினர்.  இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: வெண்மணி தியாகிகளின்  நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிஐடியு சார்பில் இங்கு வெண்மணி தியாகிகள் நினை வகம் கட்டி முடிக்கப்பட்டு கம்பீரமாக காட்சி யளிக்கிறது. இந்த நினைவுச்சின்னம் தியாகி களின் பெயரை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

நாட்டை ஆளும் நரேந்திர மோடி அரசாங்கம் எல்லா விதத்திலும் படுதோல்வி அடைந்து விட்டது. பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. தொழில் வளர்ச்சி இல்லை. அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார். விவ சாயத் தொழிலாளிகள் பட்டினியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார  வீழ்ச்சி யை,  ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்றவற்றால் ஏற்பட்ட மோசமான விளைவு களை மூடிமறைக்க நரேந்திர மோடி அரசு மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.  தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம், இந்திய நாட்டில் குடியிருக்கக் கூடிய மக்களின் குடியுரிமையை நிராகரிப்பது என்ற மோசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மதத்தின் அடிப்படையில் இஸ்லாமி யர்களுக்கு  குடியுரிமை மறுப்பதன் மூலம் அர சியல் சாசனத்தை மீறுகிற காரியத்தை நரேந்திர மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த  மோசமான அரசாங்கத்திற்கு சேவகம் செய்கிறது எடப்பாடி அரசு. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து அதிமுகவும் பாமகவும் வாக்களித்திருந்தால் இந்த சட்டம் குப்பைத் தொட்டியில் தூக்கி  எறியப்பட்டிருக்கும்.  இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டதன் மூலம் இஸ்லாமியர்களுக்கும் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை அதிமுகவும் பாமகவும் மோடி அரசாங்கத்துடன் இணைந்து செய்துள்ளன. 

குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து கள மிறங்கியதால் சென்னையில் 8000 பேர் மீது வழக்கு போட்டுள்ளது எடப்பாடி அரசு.  பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிற நரேந்திர மோடி அரசாங் கத்தை மக்கள் விரோத எடப்பாடி அரசாங்கத் தையும் கண்டித்து  ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன. பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும் ஆதரவு  தெரிவித்துள்ளன. ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றிபெறச் செய்ய களமிறங்கு வோம். இவ்வாறு அவர் கூறினார்.