இப்போராட்டத்தில் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களும் பங்கெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தால் சொந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்ஓட்டுநர் உரிமம் பெறுவது, வண்டிகளைப்பதிவது (Registration) உட்பட அனைத்து பணிகளும் தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (சுகூடீ) நடைபெறுகிறது. சட்டத்திருத்தத்தின் மூலம் இவை அனைத்தும் தனியார் ஏஜென்சிகள்வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.வாகனங்களை சாலையோர ஒர்க்ஷாப்புகளில் பழுதுபார்க்கக் கூடாது; தயாரிப்பாளரின் சர்வீஸ் சென்டரில்தான் வாகனங்களைப் பழுதுபார்க்க வேண்டும்; தற்போதுள்ள உதிரிப்பாக கடைகளில் உதிரிப்பாகம் வாங்கி மாட்டக்கூடாது; நிறுவன தயாரிப்பாளரிடம் தான் உதிரிப்பாகம் வாங்க வேண்டும். இதுதவிர கார், இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் தகுதிச்சான்றிதழ் (FC) பெற வேண்டும். தகுதிச்சான்றிதழ் அளிப்பது தனியார் நிறுவனங்கள்தான். இதன்மூலம் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வாகனங்கள் ஓட தகுதியற்றது என மாற்றப்படும்.சொந்த வாகனமாக கார், இருசக்கரவாகனத்தைப் பயன்படுத்த உற்பத்தி யாளர்களிடம் பணத்தைக் கொட்டிக்கொடுக்க வேண்டும். அன்றாடம் உயரும் பெட்ரோல், டீசல் விலை, டோல்கேட் கொள்ளை போன்றவற்றால் அவதியுறும் வாகன பயன்பாட்டாளர்கள் இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கப்பம் கட்ட வேண்டும்.
தாறுமாறான தண்டனைகள்
வாகன ஓட்டிகள் அத்தனை பேரையும் அவதிக்குள்ளாக்கும் அடிப்படையில் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைகளை முறைப்படுத்தாமல் தண்டனை அறிவிப்பதால் மட்டும் விபத்தைக் குறைக்க முடியாது. முதல்முறை ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. ±1000/- அபராதம். மறுமுறை லைசென்ஸ் ரத்து. சீட் பெல்டிற்கும் இதே தண்டனை. ஹாரன் ஒலிப்பதற்கும் தண்டனை. வரையற்ற முறையில் தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு உதவிடும் சட்டத்திருத்தம்
வாகனம் விபத்தானால் மூன்றாம் நபர் நஷ்டஈட்டிற்கான தொகையை தற்போது இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கி வருகின்றன. இனி விபத்தில் மரணம் அடைந்தால் ரூபாய் 5 லட்சமும், காயம் பட்டால் ரூபாய் 2 லட்சம் மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்தால் போதும். மீதி தொகையை உரிமையாளர்தான் கொடுக்க வேண்டும். இதைவிட மோசமான சட்டத்திருத்தம் இருக்க முடியாது.எனவேதான், சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களும், வாகனங்களைப் பயன்படுத்தும் அனைவரும் இப்போராட்ட த்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.08.01.2020 அன்று நடுப்பகல் 12.00 மணி முதல் 12.10 மணி வரை சொந்த வாக னங்களை இயக்காமல் 10 நிமிடம் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!