திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

இந்திய பொருளாதார வளர்ச்சி சிக்கல் நீடிக்கிறது... ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்

புதுதில்லி:
கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தில்லியில் வியாழனன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக்கொள்கைக் கூட்டத்திற்குப் பின் பேசுகையில் இதனை அவர் கூறியுள்ளார்.“உள்நாட்டுப் பொருளா தாரத்தில் கொரோனா வைரஸ்ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டில் வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும். 

கிராமப்புறங்களில் விரைவில் வளர்ச்சி திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உற்பத்தித்துறை யில் தேவை அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதற்கேற்பவே, ஜூலை மாதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளும் தென்பட்டன.எனினும், சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகம் மந்தமாகவே இருக்கும்” என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

;