tamilnadu

img

நேபாள குண்டு வெடிப்பு - 3 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளியன்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நேபாளத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு குண்டு வெடிப்பு நிகழ்ந்து. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதுகுறித்து நேபாள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.