வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

பாளையங்கோட்டையில் மாமேதை லெனின் நினைவு தின கருத்தரங்கு....

திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் மாமேதை லெனின் நினைவு தின கருத்தரங்கம்வியாழனன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.செண்பகம் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், லெனினும் புரட்சிகர அமைப்பும் என்ற தலைப்பில் பேசினார்.லெனினும் மார்க்சியமும் என்ற தலைப்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசினார். சோசலிச எழுச்சி: கேரளா முதல் பொலிவியா வரை என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான் பேசினார்.

லெனினும் நடைமுறை உத்தியும் என்ற தலைப்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார்.கருத்தரங்கில் பேராசிரியர் பொன்ராஜ் எழுதிய மார்க்சியம் கற்போம், என்.குணசேகரன் எழுதிய லெனின் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த புத்தகங்களை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, முன்னாள் மாவட்டசெயற்குழு உறுப்பினர் பி.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்ட னர்.  பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ராஜகுரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கு.பழனி நன்றி கூறினார்.

;