வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

உதகை குதிரை பந்தய மைதானத்தை கையகப்படுத்திடுக செப்.12ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

உதகை, ஆக. 29-  உதகை குதிரை பந்தய மைதா னத்தை கையகப்படுத்தக் கோரி  செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் உதகையிலுள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் திமுக  மாவட்ட செயலாளர் பா.மு.முபா ரக் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு, உதகையில் சுமார் 55 ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்கு சொந்த மான நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் எனும் அமைப்பு நீண்ட கால குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. உரிய  காலத்தில் வழங்க வேண்டிய குத் தகை பணத்தை அரசுக்கு செல்லுத் தாமல் ரூ.642  கோடி நிலுவை தொகையை பாக்கி வைத்துள் ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகு தியை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்தபோது, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் தடை பெறப்பட்டது. இது குறித்து அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட் டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வாகன நிறுத்தத் திற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தலாம் என உத்தரவை பிறப்பித்தது. அதன்படி குதிரை பந்தய மைதா னத்தின் ஒரு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துவங்கியது. இந்நிலையில் உதகையில் உள்ள குதிரை பந்தய மைதானத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்தை வழங்க முன்வர விரும்புவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டதோடு, கோத்தகிரி நெடு குளா ஊராட்சிக்குட்பட்ட கடைக் கம்பட்டி எனும் கிராமத்தில் மாற்று  இடத்திற்கான ஆய்வையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண் டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகத் தின் மாற்று இடம் வழங்கும் முயற் சியை முற்றாக கைவிட வலியு றுத்தியும், கோடிக்கணக்காக ரூபாய்  குத்தகை பாக்கி வைத் துள்ள குதிரை பந்தைய மைதா னத்தை மாவட்ட நிர்வாகம் உடன டியாக கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. முன்னதாக, இக்கூட்டத்தில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜே.ஆல்தொரை, எல்.சங்கரலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், எம்.ஏ.வினோத், காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஜே.பி.சுப்ரமணி யம், சிபிஐ சார்பில் சையது இப் ராஹிம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் க.சகாதேவன், மதிமுக சார்பில் மணிவண்ணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அப்துல் சமது, மதச்சார்பற்ற  ஜனதாதளம் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் சமது உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;