வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

கொரோனா மருத்துவ சிகிச்சையில் அசத்தும் கத்தார்.... 

தோஹா 
புவி உருண்டையில் கொடூர அரக்கனாக வலம் வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தனது பரவல் வேகத்தை குறைக்காமல் வாயுக்கூட்டம் போல போன போக்கில் பயணித்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது.  
தற்போது கொரோனா அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இதில் பலத்த சேதாரத்தை சந்தித்தது அமெரிக்கா தான். மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நடக்கிறது என்றால் அமெரிக்காவில் கொரோனா பறக்கிறது என்று தான் சொல்ல முடியும். அந்தளவுக்கு அந்நாடு கொரோனவால் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. 

இந்நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா நோய் கட்டுப்படுத்துதல் மூலம் புதிய சாதனையை படைத்தது வருகிறது. அங்கு இதுவரை 75 ஆயிரத்து 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் பலியாகியுள்ளனர். 51 ஆயிரத்து 331 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 24 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மேற்கூறப்பட்ட எண்ணிக்கை விகிதங்கள் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு இல்லை. 50 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பலி எண்ணிக்கை பெரும்பாலும் ஆயிரத்தை தாண்டி இருக்கும். ஆனால் கத்தார் நாட்டில் பலி எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெகுவாக குறைந்துள்ளது. கத்தார் நாட்டின் செயல் உலக நாடுகளுக்கு கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என்ற புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

;