வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

திருச்செங்கோட்டில் யானை தந்தம் பறிமுதல் - இருவர் கைது

நாமக்கல், ஆக. 9- திருச்செங்கோடு அருகே வீட்டில் பதுக்கி வைக் கப்பட்டிருந்த யானைத் தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் இதுதொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே யுள்ள சட்டையம்புதூரில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்செங்கோடு துணைக் காவல் காண்காணிப்பாள ருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலை மையில் காவல் துறையினர் சுப்பிரமணி மகன் சதீஷ் குமார் (26) என்பவரது வீட்டில் சோதனை மேற் கொண்டனர். அப்போது சுமார் 3 கிலோ எடையுள்ள 2 யானைத் தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை யினர், சதீஷ்குமார் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

;