tamilnadu

img

நாமக்கல்லில் ஊரக புத்தாக்கத் திட்டம்

நாமக்கல், ஜன. 20- நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான அரசுத்துறை அலுவலர்க ளுக்கான திட்ட விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம் உலக வங்கி நிதியுத வியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டமானது தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் 3,994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப் படவுள்ளது. நாமக்கல் மாவட் டத்தில் பள்ளிப்பாளையம், புதுச்சத்திரம், மோகனூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக் குட்பட்ட 87 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ளது. முதற்கட்டமாக புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்கு தல், அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியன தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டத் தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில் சுய உதவிக் குழு குடும்பங்களே பயனாளிகள் ஆவர். சுய உதவிக்குழுக் களிலுள்ள பெண்கள், இளைஞர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோர், முதல் தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், ஆதிதிராவி டர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித் தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் செயல் அலுவலர்கள் அ.இராஜேந்திரன், ஆர். சுரேஷ்குமார், எஸ்.தனலெட்சுமி, ஆர்.காமராஜ், புதுச்சத்தி ரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.சாந்தி, புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.ஏ.சரவணன், ஏ.பிரபாக ரன், வட்டார அளவிலான அனைத்து முதன்மை துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர் கள், ஊராட்சி செயலாளர்கள்  உட்பட வட்டார பணியாளர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;