திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

யெச்சூரி சொன்னால்தான் காஷ்மீர் நிலவரம் தெரியும்

நாகர்கோவில்:
உச்சநீதிமன்ற உத்தரவின் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீர் மாநிலம் சென்று திரும்பியுள்ளார். அவருக்கு அங்குஎன்ன அனுபவம் கிடைத்தது என்றும்அங்குள்ள மக்களின் நிலைமை என்ன என்பதுகுறித்தும் அவர் சொன்னால் தான் நமக்குதெரிய வரும் என திருச்சி சிவா கூறினார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கன்னியாகுமரியில் வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: காஷ்மீர் மாநில கவர்னர் அழைப்பின் பேரில் ராகுல் தலைமையில் காஷ்மீர் சென்ற எங்களை போராட்டம் நடத்தவும் அமைதியை சீர்குலைக்கவும் சென்றதாக தவறாக நினைத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.  ஏற்கெனவே உலகளவில் இந்தியா உணவு உற்பத்தியில் பின் தங்கியுள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத எந்த நாடும் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் விவசாயத்தை சார்ந்தது. ஆனால்தற்போது அந்த துறை மிகவும் நலிவடைந்துள்ளது. விளை நிலங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறி வருகின்றன. நம் நாடுவிவசாயத்தை நம்பிய நாடாகும். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் விவசாயிகளின் நிலை உயர்த்தி அத்துறை முன்னேற்றத்துக்கான நடவடிக்கையை பா.ஜ.க அரசு மேற்கொள்ள வேண்டும்.பட்ஜெட்டில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசுக்கு எதிர்பார்த்த ரூபாய்1.25 லட்ச கோடி வருவாய் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை வெளியிடாமல்பல்வேறு விஷயங்களில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பொது துறை நிறுவனங்களை விற்ற வகையில் மத்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

பாதுகாப்புக்கு உகந்ததல்ல
இதேபோன்று நாடு முழுவதும் பாதுகாப்பு  தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் பல லட்ச ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்ததொழிற்சாலையையும் தனியார் மயமாக்கும் முயற்சியானது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், செல்போன் சார்ஜர் போன்ற பொருள்கள் மீதான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களுக்கு தெரியவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மீது எடுத்த நடவடிக்கை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும் என அவர் கூறினார்.

;