tamilnadu

img

நாகை, பெரம்பலூர், அரியலூர், கரூரில் மறியல்

நாகப்பட்டினம், ஜன.8- பொதுமக்கள், தொழிலாளர் கள், விவசாயிகளுக்கு எதிராக எதேச்சதிகார, பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியையும் மதவெறிச் சட்டங்க ளையும் எதிர்த்து, புதன்கிழமை அன்று அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் மத்திய-மாநில அனைத்துத் தொழிற்சங்கங்கள், கோடிக் கணக் கான தொழிலாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். சிபிஎம் நாகை, கீழ்வேளூர், திருமருகல் ஒன்றியங்கள் மற்றும் நாகை நகரம் சார்பில், சிக்கல் ரயில் நிலையத்தில் திருச்சி வழியாகக் காரைக்காலுக்குச் செல்ல வந்த சரக்கு ரயில் மறித்து நிறுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார்.
நாகை
நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, தொமுச, நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி. மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரணியம்
வேதாரணியம் ஒன்றியக்குழு சார்பில் தாணிக்கோட்டகம் கடைத் தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார்.  கீழையூர், தலைஞாயிறு ஒன்றி யங்கள் சார்பில், கீழையூர் ஆலங் குடிக் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார்.  மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய ஒன்றியங்கள் சார்பில், மயிலாடுதுறைக் கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார்.  ஆக்கூர் முக்கூட்டில் நடை பெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அண்ணா சிலை மற்றும் ஜெயங்கொண்டம் தபால் அலுவலகம் முன்பு சிபிஎம் மற்றும் தோழமை கட்சிகள் மறியலில் ஈடுபட்டன.
பெரம்பலூர்
புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின் (சிஐடியு), ரெங்கசாமி(எல்பிஎப்) அ.ராஜேந்திரன்(ஏஐடியுசி), சின்ன சாமி (ஹெச்எம்எஸ்) ஆகியோர் தலைமை வகித்தனர்.
கரூர்
சிபிஎம், தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் உதவியாளர் சங்கம் இணைந்து குளித்தலையில் மறியல் போராட்டம் நடத்தின. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராஜூ, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பத்மாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;