தூத்துக்குடி, ஜூன் 1- ஸ்ரீவைகுண்டம் அருகே மேய்சச லுக்கு விட்டிருந்த 2 மாடுகளை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகே வடக்கு தோழப்பன் பண்ணை கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் இசக்கிமுத்து (35), மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் அப்பகுதியில் மாடுகளை மேய்சசலுக்கு விட்டிருந்தார். அதில் 2 மாடுகளை ஒருவர் கயிறால் கட்டி இழுத்துச் சென்றாராம். இதனைப் பார்த்து இசக்கிமுத்து, அந்த நபரை பிடித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் கொங்க ராயகுறிச்சி, மெயின் ரோட்டைச் சேர்ந்த முருகன் மகன் நாராயணன் (40) எனத் தெரியவந்தது. இதையடுத்து மாடுகளை திருட முயன்றதாக நாராயணன் மீது வழக்குப் பதிந்து சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் அவரை கைது செய்தார்.