tamilnadu

img

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வாலிபர்கள் மண்வெட்டி ஏந்தி ஊர்வலம்....

திருத்துறைப்பூண்டி:
தில்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி நகர குழுவின் சார்பில் செவ்வாய்க்கிழமை மண்வெட்டி ஏந்தி டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பா.மதன்சிங் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட துணை செயலாளர்ஏ.கே.வேலவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர். நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாணவர் சங்க மாநில துணை செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.