tamilnadu

img

கீழ வெண்மணியில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் அஞ்சலி....

திருவாரூர்:
வெண்மணி தியாகிகள் நினைவு தின சிறப்புக் கூட்டம் டிசம்பர் 25 வெள்ளியன்று திருவாரூரில் பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலப் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் க. சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார்.  ஜி.மீனாட்சிசுந்தரம் (மதுரை), செ.முத்துக்குமாரசாமி (திருநெல்வேலி), களப்பிரன் (தமுஎகச), என்.சிவகுரு (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  எல்.ஐ.சியில் பணியாற்றும் தஞ்சை, மதுரை மற்றும் நெல்லைக் கோட்டஊழியர்கள், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ். செல்வராஜ்  (தஞ்சைக் கோட்டம்) வரவேற்புரை ஆற்றினார்.  என்.சுரேஷ்குமார் (மதுரைக் கோட்டம்) நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் கீழ வெண்மணியின் வளைவில் துவங்கி நினைவிடம் வரை இன்சூரன்ஸ் ஊழியர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.