குடவாசல், அக்.4- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் பேரூராட்சி பகுதியில் அமை ந்துள்ள புங்கஞ்சேரி தெருவில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே குப்பை கழிவு கள் குவிந்துள்ளதால் பல்வேறு நோய் பரவ வாய்ப்புள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக நகரச் செயலாளர் எஸ்.சாமிநாதன் வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் புங்கஞ்சேரி தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டி அருகே தண்ணீர் போக வழி யில்லாமல் தேங்கி உள்ளது. மேலும் கால்ந டைகளின் கழிவுகள், குப்பைகள் நிறைந்து உள்ளதால் பல்வேறு நோய் பரவும் அபா யம் உள்ளது. ஆகவே உடனே குப்பை கழிவு களை அப்புறப்படுத்தி, குடிநீர் தொட்டி அருகே நீர் தேங்காமல் கழிவுநீர் ஓட வழி செய்ய வேண்டும். எரியாமல் உள்ள தெரு விளக்குகளை சீர்செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட செயல் அலு வலர், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள குப்பை களை உடனே அகற்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் சீர் செய்வதாக கூறினார்.