tamilnadu

img

அவசரக் கதியில் தூர்வாரும் பணிகளில் மக்கள் வரிப்பணம் கொள்ளை

மன்னார்குடி, செப்.8- காவிரி நீர்வரத்து நேரத்தில் அவசரகதி யில் தூர்வாரும் பணி கள் அறிவிக்கப்பட்டு மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என மன்னார் குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: டெல்டா முழுவதும் குடிமராமத்து என்ற பெயரில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் அவசரகதியில் பல குறைபாடுகளுக்கிடையே நடை பெற்று வருகின்றன. மேட்டூரில் தண் ணீர் திறக்கப்பட்ட பிறகே பல பணிகள் துவங்கப்பட்டன. ஏரி குளங்களை தூர் வார மற்றும் ரெகுலேட்டர் தடுப்பணை கள் என்று 1829 பணிகளுக்காக 499.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் டெல்டாவில் 543 பணிகளுக் காக 109.40 கோடிரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது. பணிகளை விவசாயிகளே குழுக்கள் அமைத்து நேரடியாக செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப் பட்டது. ஆனால் பெரும்பான்மையான பணிகள் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு டெண்டர் முறையில் இல்லாமல் நேரடியாகவே நியமனமுறையில் பணி வழங்குவது என்று அரசு முடி வெடுத்துள்ளது. இப்படி ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு பணியை வழங்கு வதற்காகத் தான் என்று உண்மையான விவசாயிகள் குமுறுகிறார்கள். ஆகையால் பல பணிகள் திட்ட மிட்டபடி நடைபெறவில்லை. நீர்நிலை களை தூர் வாருகிறோம் என்ற பெய ரில் பல இடங்களில் ஆளும் கட்சியினர் கண்துடைப்பு வேலையை செய்து, இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள் ளையடித்து வருகிறார்கள். விவ சாயத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் சூறையாடப்படுகிறது. ஓர் குளத்துக்கு 1 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டும் எந்த குளமும் முழுமையாக தூர் வாரப்படவில்லை.  மாறாக மேலோட்டமாக மண்ணை லேசாக சுரண்டி மட்டுமே சென்றுள் ளார்கள். இதை கண்டும் காணாதது போல் ஒரு சில அரசு அதிகாரிகளும் இதற்கு துணை போகிறார்கள். மேட்டூர்அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் அணை யிலிருந்து நீர்வரத்து நிச்சயமாக அதி கரிக்கப்படும். அதுசமயம் டெல்டா வின் அனைத்து நீர் வழித்தடங்களிலும் தண்ணீர் கரைபுரண்டோடி ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரப்பப் பட்டு சேமிக்கப்பட வேண்டுமென்றால் வழித்தடம் அனைத்தும் சரிவர தூர் வாரப்பட வேண்டும். மாறாக அரசு கஜானாவை சூறை யாட ஓர் யுத்தியாகவே இத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். கோட்டூர் பகுதி வாய்க்கால்கள், எடையர் நத்தம் பகுதி வாய்க்கால், புள்ளவராயன் குடிக்காடு வழியே பாயும் இலுப்படி வாய்க்கால் போன்ற நீர் வழித்தடங்க ளில் நடைபெற வேண்டிய தூர்வாரும் பணி பாதி அளவிற்கு கூட நடைபெற வில்லை. பாலையூர் வாய்க்காலில் பாலப் பணிகள் மிகவும் காலம் தாழ்த் தப்பட்டு சில நாட்களுக்கு முன்புதான் துவங்கப்பட்டன. அதனால் அந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்க முடி யாத ஒரு சூழல் இன்றளவும் நிலவு கிறது.  அவசரகதியில் பணிகள் நடைபெறு வதால் பல இடங்களில் தரமற்ற முறை யில் வேலைகள் நடைபெறுகின்றன, சரி யான திட்டமிடலும் முன்யோசனையும் இல்லாமல் அரசின் செயல்பாடுகள் உள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. இன்னமும் ஏரி குளம் குட்டைகளுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.