திருவாரூர் மாவட்டம் சாளுவனாறு, திருத்துறைப்பூண்டி முல்லையாறில் காலதாமத தூர்வாரும் பணியால் அது முடிவதற்குள் பாசன நீர் வந்து விட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குடிமராமத்து பணிக்காக ஒதுக்கிய நிதி எங்கே; ஏன் இன்னும் பணிகள் முடிக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். இப்பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.