குடவாசல், டிச.26- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் உறுப்பினருக்கு (10) வார்டு போட்டியிடும் ஜெயா கண்ணனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பாக ஜெயா கண்ணன் 10-ஆவது வார்டு கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிடு கிறார் இவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் வாக்களிக்க வேண்டி வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு கிராம பொதுமக்களி டம் வாக்கு கேட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் நா.பாலசுப்பிர மணியம், எம். சேகர், மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.இன்ப நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு கேட்டனர்.