புழல் சிறையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவள்ளூர், மே 30- திருவள்ளூர் மாவட்ட புழல் மத்திய சிறை 2ல் காலியாகஉள்ள பல்வேறு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என புழல் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறை 2-ல் காலியாக உள்ள ஆண்செவிலி உதவியாளர், லாரி டிரைவர், இடைநிலை ஆசிரியர், நாவிதர், துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்திற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு பயிற்சி தேர்ச்சி முடித்திருக்க வேண்டும். லாரி டிரைவர் பணியிடத்திற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.துப்புரவு பணியாளர், நாவிதர் பணிக்கு தமிழில் எழுதபடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பு 2019 ஜனவரி-1 அன்று 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஜூன் 10ஆம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர் மத்திய சிறை-2 (விசாரணை) புழல், சென்னை –- 66. தொலைபேசி எண். 044 26590350என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என புழல் மத்திய சிறை-2 சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தும் வங்கி கணக்கு தொடங்கும் வசதி இந்தியன் வங்கி அறிமுகம்
சென்னை,மே 30-பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்நேரமும்,எங்கிருந்தும் சேமிப்பு வங்கி கணக்கை துவக்கும் வகையில், இந்தியன் வங்கியானது “ஐபி டிஜி “ எனும் புதியதொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தொழில் நுட்பத்தின் மூலம், இந்தியன் வங்கியின் “ஐபி வாடிக்கையாளர் ஆப்” மற்றும் வங்கியின் வலைதளத்தில் சேமிப்பு வங்கிக்கணக்கினை துவங்கலாம். சேமிப்புவங்கி கணக்கை துவக்க விரும்புவோர், தங்களது ஆதார் எண், பெயர், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைபதிவிட்டு கணக்கினை உடனே துவங்கலாம்.இந்தியன் வங்கி, வாடிக்கையாளர்களின் நேரத்தை சேமிக்கும் விதமாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை விரிவாக்கும் வங்கியின் ஒரு பகுதியாக, இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியானது, ஏற்கனவே வாடிக்கையாளர்கள் நேரத்தினை கருத்தில் கொண்டு, பணபரிமாற்றங்களை ஆன்லைன், மொபைல் மூலம் செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை வங்கியின் துணைப்பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.