வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து

திருவள்ளூர், ஜன.27-

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் அடுத்த உட்கோட்டை கிராமத்தில் குளிர்சாதனப் பெட்டி, சலவை செய்யும் இயந்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைப் மரக்கட்டை மற்றும் நெகிழி பொருள்களால் பேக்கிங் செய்யும் தனியார் தொழிற்சாலையில் இன்று (புதன்கிழமை) 3 மணி அளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமடைந்ததாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

;