சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த உமாசங்கர் அவர்களின் மகள் வினிஷா அப்பகுதியில் உள்ள எஸ்.கே.பி இண்டர்நேஷனல் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பாடங்களுக்கு அடித்த நிலையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என அதிக ஆர்வம் கொண்டவர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். நிர்வாகத்தின் உதவியுடன் சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்துள்ளார். இது கரித்துண்டுகளுக்கு பதிலாக சூரிய சக்தியை கொண்டு செயல்படுகிறது. இவரின் திறமையை பாராட்டி ஸ்வீடன் அரசு பட்டயமும், பதக்கம் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொளி மூலம் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே, இந்த மாணவிக்கு கடந்த ஆண்டு அறிதிறன் மின் விசிறியை கண்டுபிடித்ததாக அப்துல்கலாம் இக்னைட் விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமரின் ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு வினிஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.