திருவண்ணாமலை,ஜன.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த முள்ளண்டிரம், குன்னத்தூர், கலசப் பாக்கம், தென்பள்ளிப்பட்டு, கீழ்பென்னாத் தூர் ஆகிய பகுதிகளில் இளைஞர் விளை யாட்டுத் திட்டம் தொடக்கி வைக்கப் பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி தலைமை வகித்தார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விளையாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். கிராமங்களில் உள்ள இளைஞர்களின் உடல் ஆரோக்கியம், மன வளத்தை மேம் படுத்தவும் கூட்டு மனப்பான்மையை உரு வாக்கவும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது என்றார். இத்திட்டத்தின் கீழ், ஆண்கள், பெண் களுக்கென தனித்தனியாக ‘அம்மா’ இளை ஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைக் கப்படும். கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப் பந்து உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு உபகர ணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களும் வழங்கப்படும். இந்த விளையாட்டுகளில் பயிற்சி பெறும் ஆண்கள், பெண்களின் திற மையால் அடையாளம் காணப்பட்டு, அவர் கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வகையில் தனிப் பயிற்சி அளிக்கப் படும் என்றும் அமைச்சர் கூறினார்.