tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

முருங்கப்பாளையம் சாக்கடையை தூர்வார கோரிக்கை 

 திருப்பூர், ஜூலை 14 – திருப்பூர் மாநகராட்சி 27ஆவது வார்டுக்கு உட்பட்ட முருங்கப்பாளையம்  பகுதியில் சாக்கடையைத் தூர்வார  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப் பட்டது. முருங்கப்பாளையம், ராஜம்மாள் லே-அவுட் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களிடம் கையெழுத்துப் பெற்று, மார்க் சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பி.முரு கேசன், முருங்கப்பாளையம் கிளையைச் சேர்ந்த குமார், ரஞ்சித், தீபன், பாலசுப்பிர மணியன், மயில்சாமி, பொன்னுச்சாமி, பழனிச்சாமி, சம்பத் ஆகியோர் வியாழ னன்று திருப்பூர் மாநகராட்சி ஆணை யரிடம் மனு அளித்தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது: முருங்கப்பாளையம் முதல் வீதியில் உள்ள  சாக்கடை, நீண்ட நாட்களாக தூர் வாரப் படாததால் மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குளம் போலத் தேங்கி நிற்கிறது. குப்பை களும் சேர்ந்து கொசுக்களின் பிறப்பிடமாக மாறிவிட்டது. மழைக் காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து  மக்கள் பெரும் இன்னலுக்கு ஆட்படுகின் றனர். ராஜம்மாள் லே-அவுட் பகுதியிலும் சாக்கடைக் கால்வாய் அமைப்பு முறை சரியில்லாத காரணத்தால், மழை நீருடன் அடித்து வரப்படும் சாக்கடை நீரும், சேறும்,  குப்பைகளும் வீடுகளுக்குள் புகுந்து விடு கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவு கிறது. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் நீரும் சில சமயம் குறைவான நேரமே வருகிறது. குடிநீரில் கலக்கும்  குளோரின் அளவு அதிகமாகி குடிக்க முடி யாத நிலையும் சில சமயம் உண்டு. இட்டேரி சாலை, மூன்றாவது, இரண் டாவது வீதி தெருவிளக்குகள் பெரும்பகுதி நாட்கள் ஒளிராமல் இருள் சூழ்ந்து காணப் படுகிறது. கல்லூரி சாலையில் இருந்து குமார் நகர் செல்வதற்கும், வளையங்காடு செல்வதற்கும் வாகனங்கள் அதிகளவு இப்பகுதியில் வந்து செல்கின்றன. தெரு  விளக்கு எரியாமல் இருளாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக் கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படு கிறது.  மேற்கண்ட பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்பிரச்சினைகள் மீது உடனடி கவனம் செலுத்தி, உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

காங்கேயத்தில் அரசு இடத்தில் மத விழா நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 திருப்பூர், ஜூலை 14 – காங்கேயத்தில் அரசு இடத்தில் மத விழாக்களை நடத்திய அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங் கேயம் வட்டாட்சியரிடம் திராவிடர் கழகத் தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து திராவிடர் கழகத்தின்  காங்கேயம் நகரத் தலைவர் பெ.மணி வேலு காங்கேயம் வட்டாட்சியரிடம் வியாழனன்று கொடுத்துள்ள மனுவில் கூறி யுள்ளதாவது: மதச்சார்பின்மையையும், அவற்றின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளையும், அரசாணைகளையும் அவமதிக்கும் வகையில், காங்கேயம் காவல் துணைக் கண் காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டு, கடந்த 2-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட மத வழி பாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண் டிருக்கும்போதே, காங்கேயம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் திராவிடர்  கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்   மத வழிபாடு தொடர்பான விழாக்களை  அவரவர் வீடுகளில் வைத்துக் கொள் ளலாமே தவிர, அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்க சட்டத்தில் அனுமதி யில்லை. எனவே, காங்கேயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல்துறை குடியிருப்புகள் அடங்கிய அரசு வளாகத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலத்தை அகற்றக் கோரி மனு கொடுத்தனர். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகளையும், அரசு உத்தரவுகளையும் இணைத்து அவர்கள் கொடுத்த மனுவை சற்றும் பொருட்படுத்தாமல், காங்கேயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மேற்கண்ட அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத விழாவை நடத்தியுள்ளனர். எனவே, அரசுக்குச் சொந்தமான வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மதவழி பாட்டுத் தலத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். மேலும், அரசு இடத்தில் கோயில்  கும்பாபிஷேகம் நடத்தி மதச்சார் பின்மையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காவல் துணைக் கண்காணிப் பாளர் உள்ளிட்ட தொடர்புடைய அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;