tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

அவிநாசி, ஜன. 25- சேவூர் அருகே பொங்கலூரில் 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் சனியன்று கைது செய்தனர். அன்னூர் பகுதியைச் சேர்ந்த மாணவி புளியம் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி பொங் கலூர் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைய டுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில், சனிக்கிழமை அன்னூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாகத் அறிந்த பெற்றோர் மாணவியை மீட்டனர். பின்னர், சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில், கோவை புலியகுளம் பகுதியைச்  சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரூபன்குமார்(27) என்ப வர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

காவலர் குடியிருப்புக்கு இணையவழி விண்ணப்பிக்க ஏற்பாடு

திருப்பூர், ஜன. 25 – காவலர் குடியிருப்பில் இடம் பெற அனைத்து காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டிருப்பதாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் கூறியுள்ளார். www.policequarters.org என்ற வலைதளம் ஜனவரி 26ஆம் தேதி (இன்று) முதல் தொடங்கப் படுகிறது. இதில் அனைத்து காவல் துறையினரும் குடியிருப்புகள் கேட்டு விண்ணப்பிக்கவும், ஒதுக்கீடு பெறவும் முடியும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு காத்தி ருப்புப் பட்டியல் வரிசை எண், தனிநபரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். வெளிப்படைத் தன்மையுடன், காத்திருப்பு பட்டியல் மூப்புத்தன்மையும் உறுதி செய்யப்படும்.  இதன் மூலம் தனிநபர் விருப்பப்படி குடியிருப்பைத் தேர்வு செய்வது சாத்தியமாகும். எனவே காவல் துறையினர் இணையவழி விண் ணப்பிக்கும்படி காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.