tamilnadu

திருப்பூர் மாவட்ட செய்திகள்

செப்.17ஆம் தேதியன்று மின்தடை

தாராபுரம், செப். 14 - குண்டடம், மூலனூர், கொளத்துப்பாளையம் மற்றும் கன்னிவாடி பகுதிகளில் பராமரிப்பு பணி களுக்காக செப்.17ஆம் தேதியன்று மின்தடை அறி விக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மகேஸ் வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், குண்டடம், கன்னிவாடி, கொளத் துப்பாளையம், மூலனூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 17ஆம் தேதி (செவ்வாய்) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கொளத் துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சி புரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக் கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளி பாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்து பாளையம், ராமபட்டிணம், நகர பகுதிகளான மாரியம் மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதேபோல்  குண்டடம் துணை மின் நிலையத்திற் குட்பட்ட சூரியநல்லூர், ராசிபாளையம், எஸ்.கே. பாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளை யம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம் பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு,குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மூலனூர், அக்கரை பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிகாட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, பெரமியம், லக்கமநாயக்கன்பட்டி, வடுகபட்டி,வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல், ஆகி்ய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கன்னிவாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட கன்னிவாடி,மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக் கவுண்டன்பாளையம், நஞ்சத்தலையூர், புஞ்சை தலையூர், மணலூர், பெருமாள்வலசு  ஆகிய பகுதி களில் மின் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

வாக்காளர் சேவை மையத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருப்பூர், செப். 14- வாக்காளர்கள் தங்களது பெயர், விவரங்களை வாக்காளர்  பட்டியலில் தாங்களாகவே சரிபார்க்கும் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக நடைபெற்று வருகிறது.   திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கா ளர்களும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்கீழ் தங் களது பெயர்களை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Help line மொபைல் செயலி மூல மாகவும் சரிபார்ப்பதற்காக, வாக்காளர் சேவை மையம்  திங்கள்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செயல்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வட் டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலு வலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகிய வற்றிலும் வாக்காளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.   எனவே, பொது மக்கள் வாக்காளர் சேவை மையத் தின் மூலமாக தங்களது வாக்காளர் பதிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும்,  பொது மக்கள் வாக் காளர் பதிவினை சரிபார்க்க தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை தவறாமல் எடுத்து வரு மாறும், வாக்காளர் பெயரினை உறுதிபடுத்துவ தற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு தங்கள் பதிவை சரிபார்த்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாராபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

தாராபுரம், செப். 14 - தாராபுரத்தில் ஆற்றில் குளிக்க சென்ற வியாபாரி யின் இருசக்கர வாகனம் கொள்ளைபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தாராபுரம் அலங்கியம் ரோடு காந்திபுரத்தை சேர்ந் தவர் வியாபாரி கிருஷ்ணமூர்த்தி (27). இவர் தனது உறவினருடன் புறவழிச்சாலையில் உள்ள புதிய அம ராவதி ஆற்றுப்பாலம் அருகே தனது இருசக்கர வாக னத்தை நிறுத்திவிட்டு குளிக்க சென்றுள்ளார். இதன் பின் குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவ ரது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து தாரா புரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பூமி பாலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கனவு ஆசிரியர் தேர்வுக்குழு அமைப்பு

திருப்பூர், செப். 14- திருப்பூர் மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருதுக் கான விண்ணப்பங்களை பரிசீலிக்க மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரி யர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கனவு ஆசிரியர் வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் பணி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள், இணை செயல்பாடுகளான இசை, ஓவியம், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறு தல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கக்கூடி யதாக ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். 5 ஆண்டு கள் பணி அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண் டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண் டவராக இருக்க வேண்டும்.  இவ்விருதிற்கான விண்ணப்பங்களை தேர்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தெரிவு செய்யும் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு, அதிலிருந்து 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது பெறுவர்.