திருப்பூர், ஜன. 30 - அன்னூர் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத் தில் உயிரிழந்த திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் நிருபர் ஆர்.கே.ராஜ சேகரன், அவரது தாயார் ஜமுனாராணி ஆகியோ ரின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வியாழனன்று காலை அவிநாசி அரசு மருத்துவ மனையில் இருவரது உடல்களும் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இதையடுத்து பூண்டி பெரியாயி பாளையம் சாலையில் உள்ள ராஜசேகரன் வீட் டிற்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் ஆத்துப்பாளையம் சாலை மின்மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.விஜய கார்த்திகேயன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், ராஜசேகரனின் தந்தைக்கு ஆறு தல் தெரிவித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், திருப்பூர், கோவை மற்றும் அவிநாசி பகுதி செய்தியாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு எம்எல்ஏ சு.குணசேகரன் பங் கேற்ற புதிய செயலி வெளியிடும் நிகழ்வில் ராஜ சேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராஜசேகரன் மற்றும் அவரது தாயார் மறை விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க (டியூஜே) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புரு ஷோத்தமன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.