திருப்பூர், டிச. 10- திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரி விக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகார்த்தி கேயன் செவ்வாயன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதி களில் முதற்கட்டமாக டிசம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளன. அவிநாசி, பொங்கலூர், குண்ட டம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய பகுதிக ளில் இரண்டாம் கட்டமாக டிச.30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்படவுள்ளனர். இதற்கான வேட்புமனுதாக்கல் திங்கள் முதல் (டிச.9) பெறப்பட்டு வருகிறது. மேலும், மாநில தேர்தல் ஆணையத்தின், அறிவு ரையின் படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொது மக்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில், திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 3-வது தளத் தில் அறை எண்-328 ல் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரமும் தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதி மீறல் மற்றும் ஏதேனும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்ட ணமில்லா தொலைபேசி எண்: 1800 425 7023 மற்றும் 0421-2971494 என்ற எண்கள் செயல்ப டுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறையைத் திறந்து வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.